பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

13. 'உழுதொழில் இழிதொழில் என்று ஆரியர் எழுதிய பழிப்பைப் புறந்தள்ளி உழவேதலை’ என்ற பெருமிதம்.

14. "இருவினை', 'இருள்வினை' என்ற முதற்

புரட்சி.

15. பெருவலிமையோடு எழுந்த எதிர்ப்பையும் முந்துறும் ஊழ்” எனப்படும் விதியை அரும் முயற்சி உடையார் உப்பக்கம்’ காண்பர் என்ற

வெற்றித்துரண்.

16. ஈகையின் சிறப்பால் மேல் உலகம்’ ஒதுக்கப்

பட்ட கருத்து வாள்.

17. கொல்லாமையின் முன்னே ஆரியர் செய்யும் ஆயிரம் வேள்வியும் தீமையாகும் என்னும் தோலுரிப்பு.

18. மாந்தர் வேண்டும்போது மழை பெய்தால் எத்துணை பயனோ அத்துணை பயன் போன்றவள் கற்புடையவள் என்ற பெண்மை மணிமுடி.

19. திங்களைப் பாம்பு கவ்வும் வானவியல் கருத்

தமைப்பு.