பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

1. உணர்வும் அறிவும்

தேய்த்த பழங்கயிறு

இரண்டு ஆண் யானைகளுக்குள் ஒரு போட்டி நிகழ்ந்தது. அது கயிறு இழுப்புப் போட்டி. இரண்டும் சம வலிமையுடையவை. இவை மெருகு ஏறிய வெண்மை மருப்புக்கள் ஏந்தலாக வளர்ந்த களிறுகள். ஒன்றைக் கிழக்கு முகமாகவும், மற்றொன்றை மேற்கு முகமாகவும் நிற்கவைத்து இரண்டின் கழுத்திலும் ஒரு கயிற்றின் இரு முனைகளையும் கட்டினர். கயிற்றைப் பற்றிய ஒரு குறிப்பு : கயிறு பழங்கயிறு: எதனால் திரிக்கப்பட்ட கயிறு: வைக்கோல் புரியினால் திரிக்கப்பட்ட புரிக்கயிறு. என்ன ஆகும்? களிறுகள் மாறுபட்டு இழுக்கவா வேண்டும்? களிறுகள் கழுத்துக்களை அசைத்தாலே கயிறு பிய்ந்து சிதறித் தூசியாகும். இதனை ஒரு புலவர்,

'ஒளிறு ஏந்துமருப்பிற் களிறு மாறுபற்றிய

தேய்புfப் பழங்கயிறு'

என்று பாடினார்.

1, தேய்புரிப் பழங்கயிற்றினார் : நற் 284-9, 10