பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

போற்றாது போனால் அந்த அறிவினால் பயனில்லை. "அறிவுடையார் எல்லாம் உடையார் (430) என்பதே. பொய்த்துப் போகும்.

"அறிவினால் ஆகுவ துண்டோ, பிறிதின்நோய்

தன்நோய்போல் போற்றாக் கடை' (315).

என்றதும்,

'அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண் பில்லா தவர்' - (997).

என்றதும் உணர்வைத் தழுவிச் செல்லாத அறிவு பயனற்றது. என்பதற்கு விதிப்புகள் ஆகின்றன.

செவிச்சுவை உணரும் உணர்வு கேள்வி அறிவோடு கூடியது. உண்ணும் வாய் உணவோ மாக்களும் கொள்ளும். இதனைக் காட்டும்,

'செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்’ (420)

என்னும் குறளால் அறிவு தழுவாத உணர்வு வாழ்விற்குப் பயன்தராதது என்றார்.

எனவே, மாந்தன் சீரான வாழ்வைச் சிறப்பாகப் பெற உணர்வும் அறிவும் ஒன்றையொன்று தழுவிச் செல்வதே. நலமாகும். திருவள்ளுவப் பெருந்தகை இக்கோட்பாட்டின் அடித்தளத்திலேயே மக்கள் வாழ்வின் செம்மையைக்

கண்டார்; விண்டார்.

1. அடைப்புக் குறிகளுக்குள் குறிக்கப்படுவது: திருக்குறட்பா எண். . .