பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 47

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு - இறைஎன்று வைக்கப் படும்’ (338)

என்னும் குறட்பாவில் மன்னன் கடவுளாக மதிக்கப்படு கிறான்.

'குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ கிற்கும் உலகு” (544)

என்று மன்னவன் அடியை உலகு தழுவும் என்றது இறைவன் மாணடி சேர்தலினும், சற்று பெருமையாகவே காட்டப் பட்டதாகிறது.

இவ்வகைக் குறிப்புக்களால்-கடவுளை மன்னனுக்குச் சமமாகக் காட்டும் குறிப்புக்களால் கடவுட் கொள்கையில் திருவள்ளுவர் இறைவனாம் கடவுளைத்தாழ்த்துவதாகவோ கடவுட் கொள்கையை மறுப்பதாகவோ பொருள் கொள்ள வேண்டியதில்லை. இருபொருள்களின் தகுதிகளையும் பகுத்துணர்ந்து, மார்ந்தர்க்கு இரண்டும் இயல்பாக வேண்டப்படுபவை என்று காட்டுவதே திருவள்ளுவரின் கருத்தாகப் புலனாகிறது. அத்துடன் கடவுட் குறிப்புள்ள இறைவன் இன்றியமையாத ஒன்றாகவோ, அனைத்திற்கும் மேலான தனி உரிமை பெற்ற ஒன்றாகவோ, ஒன்றே ஒன்றாக மேம்பட்டதாகவோ குறிக்கப் பெறவில்லை.

இந்நோக்கில் திருவள்ளுவத்தில் காணப்படும் பகுத்தறிவு முனைகளில் மேலும் இது ஒன்றாகிறது.

கடவுள்

உருவங்கொண்டு உலவுவதே கடவுள் என்னும் சொல் அக்குரிய பொருள் என்று காட்டப்பட்டது. திருவள்ளுவர் ‘கடவுள்' என்னும் சொல்லை விடுத்தாலும் உருவக்