பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 37 பொய்யிற் புலவன் புகலுரை தேராய்.", (கல்லாடம்) “ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றென எப்பா வலரும் இயைபவே வள்ளுவனர் முப்பால் மொழிந்த மொழி.' ( கல்லாடர் ) குறிப்பு - திருக்குறள் கடவுள் வாழ்த்து' என்னும் அதிகாரத்தில் எந்தச் சமயக் கடவுட் பெயரும் குறிக்கப்பட வில்லை. காணப்படுகின்றவைகளும், காணப்படாதவைகளுமான எல்லாப் பெருட்களையும் உண்டாக்கின. கடவுள் ஒருவர் உளர், அவரை வழிபடல் அவசியம் என்றே விவரிக்கப் பட்டிருக்கிறது. 4. பிறப்பில்ை உயர்வு தாழ்வு கூறுதல் பெரும்பிழை என்ற பெரியார் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்.' (தி. கு. 972) 'மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லர் கீழல் லவர்.' (தி. கு. 973)