பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 85


- - -------

6. வே8ல அம ர் த் தி க் கொ டு க்கு ங் கு மு :இக்குழு வேலையில்லாது சங்கடப்படுகிறவர்களுக்கு வேண்டிய உதவி செய்யும். அரசாங்கத்தில் 'வே லை தே டி க் கொடுக்கும் ஸ்தாபனம்' என்று ஒன்று இருந்தபோதிலும், அத்து டன் ஒத்துழைத்து இதுவும் தொண்டு புரியும். அறிவாலயக் கட்டடம் ஏறக்குறையப் பத்து கோடி ரூபாய் செலவில் கட்ட வேண்டியிருப்பதால் பலவகைப்பட்ட தொழிலாளர்கட்கும் அங்கு வேலை கொடுத்து உதவலாம். கட்டடத் தொடக்க காலத்திலேயே தோட்டம் போட வேண்டிய திட்டமிருப்பதால் கனிமரங்கள் உற் பத்தி செய்யுங் தொழிலிலும் ஈடுபடுத்தலாம். 7. தி க்க ற் ற சிறு வர் ல ன் பேணு ங் குழு :ஆதரிப்பாரற்று அலைந்து திரியுங் குழந்தைகளைக் கண்டுபிடித்து அவர்களை அறிவாலயம் கொண்டு வந்து சேர்த்து அவர்களுக்குப் பொதுக்கல்வியுங் தொழிற்கல்வியும் கற்பித்து அவர்கள் பிறர் உதவியை நாடாமல் தாமே உழைத்து வாழும் நிலைக்குக் கொண்டு வர இக்குழு பாடுபடும். அதற்கு வேண்டிய பண ஞ் சேர்க்க அறிவாலயத் தலைமை ஆபீசு நடவடிக்கை எடுக்கும். 8. .ொ றி த வ றி த் தி ரி யு ஞ் சிறு வரை ப் பா து காக் குங் குழு - பெற்றேரின் கட்டுக் கடங்காமல், துஷ்டத் தனத்திலுங் களவிலும் ஈடுபட்டுத் திரியுஞ் சிறுவர்களைப் பிடித்து, அவர்களைச் சிறைக்கைதிகளைப்போல் காபந்து செய்து, அவர்களுக் குப்பொதுக்கல்வியுங் தொழிற்கல்வியும் கற்பித்து அவர்களை நல்ல பிரஜைகளாக்கும் பணியை இக்குழு செய்யும் இதற்கு வேண்டிய பணத்தைத் தலைமை ஆபீசு நல்கும். 9. பொதுநலப் பணியில் ஈடுபட்டுப் பொருளை இழந்து ஆதரவின்றி அல்லலுறும் முதியோர்களை ஆதரிக்குங் குழு : ஒற்றர் குழு கொடுத்திருக்கும் அறிக்கையை நன்கு கவனித்து, மெய்யாக அவ்வாறு அல்லலுறும் பெரியோர்களை அறி வாலயத்துக்கு வரவழைத்து, அங்கே அவர்களுக்கு உணவு முதலிய வசதி செய்து, சாகுமளவும் அறிவாலயத்திலிருத்தி சிறப்பிக்கும் பணியை இக்குழு செய்யும்.