பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புறங்கூறாமை

பொய்த்து நகை-(ஒருவனைக்) காணாத இடத்து இழித்துரைத்து(க்கண்ட இடத்து)ப் பொய்செய்து நகுதல்.

இது, புறங்கூறுதல் பாவத்தினும் மிக்க பாவ மென்றது. ௩௧௫.

கச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர், நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

இ-ள்:- பக சொல்லி கேளிர் பிரிப்பர்-நீங்கும்படி சொல்லித்தம் கேளிரானாரைப் பிரிப்பர், நக சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர்-மகிழச் சொல்லி நட்பினை உயர்வு பண்ண மாட்டாதார்.

இது, புறங்கூறுவார் நட்டவரை இழப்ப ரென்றது. ௩௧௬.

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னர்கொல் ஏதிலார் மாட்டு.

இ-ள்:- துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்-(தம்மோடு) செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியையுடையார், ஏதிலார் மாட்டு என்னர் கொல்-(தம்மோடு) செறிவில்லாதார் மாட்டு யாங்ஙனம் செய்வரோ?

இது, புறங்கூறுவார் யாவரோடும் பற்றில ரென்றது. ௩௧௭.

றம்நோக்கி ஆற்றும்கொல் வையம், புறம்போக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

இ-ள்:- புறம் நோக்கி புன்சொல் உரைப்பான் பொறை-பிறன் இல்லாத இடம் பார்த்துப் புறஞ்சொல் கூறுவான் உடலை, வையம் அறம் நோக்கி ஆற்றும்-நிலம் தானே அறத்தை நோக்கிப் பொறுத்ததாம் (அல்லது போக்கும்). [கொல் என்பது அசை.]

இது, புறங்கூறுவார்க்குத் துணையாவார் இல்லை யென்றது. ௩௧௮.

௧௧௫