உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகத்தேன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உயிரின் தவிப்பு

யானை பெரிய விலங்கு. ஆம்! உடலால் பெரிய விலங்கு! அதனால் பெரிய கையால் உண்கிறது! தும்பிக்கை நீண்ட பெரிய கை! ஒரே நேரத்தில் தும்பிக்கையாலும் வாயிலும் உணவு வைத்துக்கொண்டு அளவுக்கு அதிகமாக உண்டு, ஊன் பெருக்கும் யானை அந்தோ பரிதாபம்: தன்னை, தன் உடலை அறிந்து கொள்ள இயலாதது யானை! சமய நெறியில் கடவுளைத் தெரிந்துகொள்ளுதல், கடவுளை வழிபடுதல் இரண்டாம் நிலையே! முதலில், மனிதன் தன்னை அறிந்து கொள்ளுதல் வேண்டும். அதனால்தான் மாணிக்கவாசகர் ஆன்ம ஆய்வில் "நான் ஆர்" என்று முதலில் தன்னைப் பற்றிய ஆய்வைத் தொடங்குகின்றார். "தன்னை யறிதல்" முதல் கடமை! தன்னுடைய குறைகள் அறிந்தால்தானே நிறைகளை நாடிப் பயணம் செய்ய இயலும் "தம்மை யறிந்து தலைவனை உணர்தல்" என்பது மெய்கண்டார் வாக்கு!

மனிதன் யார்? மனிதன் தானா? மிருகத்தில் மனிதன்; மனிதனில் மிருகம் மனிதனில் மனிதன் என்ற படிமுறைகள் உண்டு! இந்த வரிசையில் மனிதன் யார்? தான் யார் என்று அறியாத நிலையில் வளர்ச்சியில்லை! ஆதலால், தன்னையறிதல் வாழ்க்கையில் முதல் நிலை! யானைக்கு எப்படி தன்னை, தன் உடலை அறிய,முடியாத நிலையோ அதுபோலவே மனிதனுக்கும் தன்னை அறிய