பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. திருச்சாழல் அயனை அநங்கனை அந்தகனைச் சந்திரனை வயனங்கள் மாயா வடுச்செய்தான் காண் எடீ நயனங்கள் மூன்றுஉடைய நாயகனே தண்டித்தால் சயம்அன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ (4) தக்கனையும் எச்சனையும் தலை அறுத்துத் தேவர்கணம் தொக்கன வந்தவர்தம்மைத் தொலைத்ததுதான்என் எடி தொக்கன வந்தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்து அங்கு எச்சனுக்கு மிகைத்தலை மற்று அருளினன் காண் சாழலோ (5) அலரவனும் மாலவனும் அறியாமே அழல்உருஆய் நிலம்முதல் கீழ்அண்டம்.உற நின்றதுதான் என் ஏடி நிலம்முதல் கீழ்அண்டம்.உற நின்றிலனேல் இருவரும்தம் சலம்முகத்தால் ஆங்காரம் தவிரார் காண் சாழலோ (6) 433