பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருப்பள்ளியெழுச்சி கூவின பூம்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஒவின தாரகை ஒளிஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத் தேவ நல்செறி கழல் தாள்.இணை காட்டாய் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே யாவரும் அறிவுஅரியாய் எமக்கு எளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே (3) இன்இசை வினையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே என்னையும் ஆண்டுகொண்டு இன்அருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே (4) பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்குஇலன் வரவுஇலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரைச் சீதம்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து எதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள்புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே (5)