பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருப்பள்ளியெழுச்சி விண்னகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே உன தொழுப்பு அடியோங்கள் மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே வண்திருப் பெருந்துறையாய் வழி அடியோம் கண்அகத்தே நின்று களிதரு தேனே கடல் அமுதே கரும்பே விரும்பு அடியார் எண்அகத்தாய் உலகுக்கு உயிர் ஆனாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே (9) புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்ற ஆறுஎன்று நோக்கித் திருப்பெருந்துறை உறைவாய் திருமால்.ஆம் அவன்விருப்பு எய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும் அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆர்.அமுதே பள்ளி எழுந்தருளாயே (10) 540