பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. செத்திலாப் பத்து புலைய னேனையும் பொருள்என நினைந்துஉன் அருள்புரிந்தனை புரிதலும் களித்துத் தலையினால் நடந்தேன் விடைப் பாகா சங்கரா எண்இல் வானவர்க்கு எல்லாம் நிலையனே அலை நீர்விடம் உண்ட நித்தனே அடையார் புரம் எரித்த சிலையனே எனைச் செத்திடப் பணியாய் திருப்பெ ருந்துறை மேவிய சிவனே (3) அன்பர் ஆகிமற்று அரும்தவம் முயல்வார் அயனும் மாலும்மற்று அழல்உறு மெழுகுஆம் என்பர்ஆய் நினைவார் எனைப் பலர் நிற்க இங்குஎனை எற்றினுக்கு ஆண்டாய் வன்பராய் முருடு ஒக்கும் என்சிந்தை மரக்கண் என்செவி இரும்பினும் வலிது தென்ப ராய்த்துறை யாய் சிவ லோகா திருப்பெ ருந்துறை மேவிய சிவனே (4) ஆட்டுத் தேவர்தம் விதிஒழித்து அன்பால் ஐயனே என்றுஉன் அருள்வழி இருப்பேன் நாட்டுத் தேவரும் நாடுஅரும் பொருளே நாதனே உனைப்பிரிவு உறா அருளைக் காட்டித் தேவநின் கழல் இணை காட்டி காய மாயத்தைக் கழித்துஅருள் செய்யாய் சேட்டைத் தேவர்தம் தேவர் பிரானே திருப்பெரு ந்துறை மேவிய சிவன்ே (5) 572