பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. அதிசயப் பத்து முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண் அது உடைஎந்தை தன்னை யாவரும் அறிவதற்கு அரியவன் எளியவன் அடியார்க்குப் பொன்னை வென்றது.ஒர் புரிசடை முடிதனில் இளமதி அதுவைத்த அன்னை ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே (3) பித்தன் என்றுஎனை உலகவர் பகர்வதுஓர் காரணம் இது கேளிர் ஒத்துச் சென்றுதன் திருவருள் கூடிடும் உபாயம் அது அறியாமே செத்துப் போய்அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படு கின்றேனை அத்தன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே (4) பரவு வார்.அவர் பாடுசென்று அணைகிலேன் பல்மலர் பறித்துரத்தேன் குரவு வார்குழலார் திறத்தே நின்று குடிகெடு கின்றேனை இரவு நின்றுஎரி ஆடிய எம்இறை எரிசடை மிளிர்கின்ற அரவன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே (5) ՅՈՅ