பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. வாழாப் பத்து பஞ்சின்மெல் அடியாள் பங்கநீ அல்லால் பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய் செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே (6) பருதிவாழ் ஒளியாய் பாதமே அல்லால் பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய் திருஉயர் கோலச் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே கருணையே நோக்கிக் கசிந்துஉளம் உருகிக் கலந்துநான் வாழும்ஆறு அறியா மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே (7) பந்தனை விரலாள் பங்கநீ அல்லால் பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய் செம்தழல் போல்வாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே அந்தம்இல் அமுதே அரும்பெரும் பொருளே ஆர்.அமுதே அடியேனை வந்துஉய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே - (8)