பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. திருக்கழுக்குன்றப் பதிகம் மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலம் கெடுத்த பெருந்துறை விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவது அறிந்திலேன் இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும் வைப்பிடம் இன்றியே கலங்கினேன் கலங்காமலே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே பூண்ஒணாதது ஒர் அன்பு பூண்டு பொருந்தி நாள்தொறும் போற்றவும் நான் ஒணாதது ஒர் நாணம் எய்தி நடுக் கடலுள் அழுந்தி நான் பேண் ஒணாத பெருந்துறைப் பெரும் தோணி பற்றி உகைத்தலும் - காண் ஒணாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே கோல மேனி வராகமே குணம் ஆம் பெருந்துறைக் கொண்டலே சீலம் ஏதும் அறிந்திலாத என் சிந்தை வைத்த சிகாமணி ஞாலமே கரி ஆக நான்உனை நச்சி நச்சிட வந்திடும் காலமே உனை ஒத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே 64B (3) (4) (5)