பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. கண்ட பத்து உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்து என் உளம்மன்னிக் கருத்துஇருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை அருத்தியினால் நாய் அடியேன் அணிக்கொள் தில்லைக்கண்டேனே கல்லாத புல்அறிவின் கடைப்பட்ட நாயேனை வல்லாள னாய்வந்து வனப்பு:எய்தி இருக்கும் வண்ணம் பல்லோரும் காணஎன்தன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே சாதிகுலம் பிறப்புஎனும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதம்இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு பேதைகுணம் பிறர்உருவம் யான்எனது என் உரைமாய்த்து கோதுஇல் அமுது ஆனானைக் குலாவு தில்லைக் கண்டேனே 655 (3) (4) (5)