பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. கண்ட பத்து பிறவி தனை அறமாற்றிப் பிணிமுப்புஎன்ற இவை இரண்டும் உறவினொடும் ஒழியச்சென்று உலகுஉடைய ஒருமுதலைச் செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம்மன்னி மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே பத்திமையும் பரிசும்இலாப் பசுபாசம் அறுத்தருளிப் பித்தன்.இவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே சித்தம்எனும் திண்கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லைக் கண்டேனே அளவுஇலாப் பாவகத்தால் அமுக்குஉண்டுஇங்கு அறிவுஇன்றி விளைவுஒன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு அளவுஇலா ஆனந்தம் அளித்துஎன்ன ஆண்டானைக் களவுஇலா வானவரும் தொழும் தில்லைக் கண்டேனே .658 (6) (7) (8)