பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்திரண்டாவது பிரார்த்தனைப் பத்து சதாமுத்தி (திருப்பெருந்துறை) ஆசிரிய விருத்தம் கலந்து நின்அடி யாரோடுஅன்று வாளா களித்தி ருந்தேன் பலர்ந்து போன காலங்கள் புகுந்து நின்றது இடர்பின்நாள் உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர்காண்பான் அலந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வம் கூர அடியேற்கே (1) அடியார் சிலர்உன் அருள்பெற்றார் ஆர்வம் கூர யான்அவமே முடைஆர் பிணத்தின் முடிவு இன்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் கடியே னுடைய கடுவினையக் களைந்துஉன் கருணைக்கடல் பொங்க உடையாய் அடியேன் உள்ளத்தே ஒவாது உருக அருளாயே (2)