பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. திருவெம்பாவை பைங்குவள்ைக கார்மலரால் செங்க்மலப் பைம்போதால் அங்கம் குருகு இனத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எம்கோனும் போன்று இசைந்த பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்து நம் சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்து ஆர்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப் பங்கயம் பூம்புனல் பாய்ந்து ஆடு ஏல் ஒர் எம்பாவாய் (13) காது ஆர் குழை ஆடப் பைம்பூண் கலன் ஆடக் கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆடச் சீதப்புனல் ஆடிச் சிற்றம்பலம் பாடி வேதப் பொருள் பாடி அப்பொருள் ஆமா பாடிச் சோதி திறம் பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப் பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளைதன் பாதத்திறம் பாடி ஆடு எல் ஒர் எம்பாவாய் (14) 356