பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. குழைத்த பத்து ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின்கருணை இன்றே இன்றிப் போய்த்தோதான் ஏழை பங்கா எம்கோவே குன்றே அனைய குற்றங்கள் குணம்ஆம் என்றே நீகொண்டால் என்தான் கெட்டது இரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே மான்நேர் நோக்கி மணவாளா மன்னே நின்சீர் மறப்பித்துஇவ் ஊனே புகஎன்தனைநூக்கி உழலப் பண்ணு வித்திட்டாய் ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள்செய்து கோனே கூவிக் கொள்ளும் நாள் என்று என்று உன்னைக் கூறுவதே கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம்நீ தேறும்வகைநீ திகைப்புநீ தீமை நன்மை முழுதும்நீ வேறுஒர் பரிசுஇங்கு ஒன்றுஇல்லை மெய்ம்மை உன்னை விரித்துஉரைக்கின் தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ 678 (3) (4) (5)