பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்தைந்தாவது அச்சப் பத்து ஆனந்த முறுதல் (தில்லை) ஆசிரிய விருத்தம் புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்நுதல் பாதம் நண்ணி மற்றும்ஒர் தெய்வம் தன்னை உண்டுஎன நினைந்துஎம் பெம்மாற் கற்றிலா தவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சு மாறே வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன் இருவரால் மாறு கானா எம்பிரான் தம்பி ரான்ஆம் திருஉரு அன்றி மற்றுஒர் தேவர் எத்தேவர் என்ன அருவராத வரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சு மாறே 696 () (2)