பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. திருவெம்பாவை செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாதது ஒர் இன்பம் நம்பாலதாக் கொங்கு உண் கரும் குழலி நம்தம்மைக் கோதாட்டி இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொன்பாதம் தந்தருளும் சேவகனை அம்கண் அரசை அடியோங்கட்கு ஆர் அமுதை நங்கள் பெருமானைப்பாடி நலம் திகழப் பங்கயப்பூம்புனல் பாய்ந்து ஆடு எல் ஒர் எம்பாவாய் (7) அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவிறு அற்றால்போல் கண்ஆர் இரவி கதிர்வந்து கார் கரப்பத் தண்ஆர் ஒளிமழுங்கித் தாாகைகள் தாம்அகலப் பெண் ஆகி ஆண்,ஆய் அலி ஆய்ப் பிறங்கு ஒளிசேர் விண் ஆகி மண் ஆகி இத்தனையும் வேறு ஆகிக் கண்ஆர் அமுதமும்ஆய் நின்றான் கழல்பாடிப் பெண்ணே இப்பூம்புனல்பாய்ந்து ஆடு எல் ஒர் எம்பாவாய் (18) 360