பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. குலாப் பத்து என்புஉள் உருக்கி இருவினையை ஈடுஅழித்துத் துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து முன்பு உள்ளவற்றை முழுதுஅழிய உள்புகுந்த அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே குறியும் நெறியும் குணமுமிலாக் குழாங்கள் தமைப் பிறியும் மனத்தார் பிறிவுஅரிய பெற்றியனைச் செறியும் கருத்தில் உருத்து அமுதுஆம் சிவபதத்தை அறியும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே பேரும் குணமும் பிணிப்பு:உறும்இப் பிறவிதனைத் துாரும் பரிசு துரிசறுத்துத் தொண்டர்எல்லாம் சேரும் வகையால் சிவன்கருணைத் தேன்பருகி ஆரும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே 748 (3) (4) (5)