பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அற்புதப் பத்து நடித்து மண்ணிடை பொய்யினைப் பலசெய்து நான்எனது எனும்மாயம் கடித்த வாயிலே நின்றுமுன் வினைமிகக கழறியே திரிவேனைப்பிடித்து முன்நின்றுஅப் பெருமறை கேடிய அரும்பொருள் அடியேனை அடித்து அடித்து அக்காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே (3) பொருந்தும் இப்பிறப்பு இறப்புஇவை நினையாது பொய்களே புகன்றுபோய்க் கரும்கு ழலினார் கண்களால் ஏறுண்டு கலங்கியே கிடப்பேனைத் திருந்து சேவடிச் சிலம்புஅவை சிலம்பிடக் திருவொடும் அகலாதே அரும்து ணைவன்ஆய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியேனே (4) மாடும் சுற்றமும் மற்றுஉள போகமும் மங்கையர் தம்மோடும் கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை விடு தந்துஎன்தன் வெம்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல்காட்டி ஆடு வித்துஎனது அகம்புகுந்து ஆண்டதுஓர் அற்புதம் அறியேனே (5) 758