பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. திருவார்த்தை அணிமுடி ஆதி அமரர் கோமான் ஆனந்தக் கூத்தன் அறு சமயம் பணிவகை செய்து படவு அது ஏறிப் பாரொடு விண்ணும் பரவி ஏத்த பிணிகெட நல்கும் பெருந்துறை எம் பேர் அருளாளன் பெண் பால் உகந்து மணி வலை கொண்டு வான் மீன் விசிறும் வகை அறிவார் எம்பிரான் ஆவாரே (3) வேடுஉரு ஆகி மயேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத் தேட இருந்த சிவபெருமான் சிந்தனை செய்து அடி யோங்கள் உய்ய ஆடல் அமர்ந்த பரிமான்றி ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள் ஏடர்களை எங்கும் ஆண்டுகொண்ட இயல்பு அறிவார் எம்பிரான் ஆவாரே (4) வந்து இமையோர்கள் வணங்கிஏத்த மாக் கருணைக்கடல் ஆய்அடியார் பந்தனை விண்டுஅற நல்கும்.எங்கள் பரமன் பெருந்துறை ஆதிஅந்நாள் உந்து திரைக்கடலைக் கடந்துஅன்று ஒங்கு மதில் இலங்கைஅதனில் பந்துஅணைமெல் விரலாட்கு அருளும் பரிசு அறிவார் எம்பிரான் ஆவாரே (5) 778.