பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. திருவார்த்தை வேவத் திரிபுரம் செற்றவில்லி வேடுவன் ஆய்கடி நாய்கள்சூழ் ஏவல் செயல் செய்யும் தேவர்முன்னே எம்பெருமான்தான் இயங்குகாட்டில் ஏஉண்ட பன்றிக்கு இரங்கிஈசன் எந்தை பெருந்துறை ஆதிஅன்று கேவலம் கேழல் ஆய் பால்கொடுத்த கிடப்பு அறிவார் எம்பிரான் ஆவாரே (6) நாதம் உடையது.ஒர் நல்கமலப் போதினில் நண்ணிய நல்நுதலார் ஒதிப் பணிந்துஅலர் து விஎத்த ஒளிவளர் சோதிஎம் ஈசன்மன்னும் போதுஅலர் சோலைப் பெருந்துறைஎம் புண்ணியன் மண்ணிடை வந்துதோன்றிப் பேதம் கெடுத்துஅருள் செய்பெருமை அறியவல்லார் எம்பிரான் ஆவாரே (7) பூஅலர் கொன்றைஅம் மாலைமார்பன் போர்.உகிர் வன்புலி கொன்றவீரன் மாதுநல் லாள்உமை மங்கைபங்கன் வண்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன் ஏதுஇல் பெரும்புகழ் எங்கள்ஈசன் இரும்கடல் வாணற்குத் தீயில்தோன்றும் ஒவியமங்கையர் தோள்புணரும் உருஅறிவார் எம்பிரான் ஆவாரே (8) 780