பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தைந்தாவது யாத்திரைப் பத்து அனுபவாதீத முரைத்தல் (அனுபவ அதீதம் உரைத்தல்) (தில்லை) ஆசிரிய விருத்தம் பூஆர் சென்னி மன்னன்எம் புயங்கப் பெருமான் சிறியோமை ஒவாது உள்ளம் கலந்துஉணர்வுஆய் உருக்கும் வெள்ளக் கருணையினால் ஆ ஆ என்னப் பட்டுஅன்புஆய் ஆட்பட்டீர் வந்து ஒருப்படுமின் போவோம் காலம் வந்ததுகாண் பொய்விட்டு உடையான் கழல்புகவே () புகவே வேண்டாம் புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள் மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள் நகவே ஞாலத்து உள்புகுந்து நாயே அனைய நமைஆண்ட தகவே உடையான் தனைச்சாரத் தளராது இருப்பார் தாம்தாமே (2) 794