பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. யாத்திரைப் பத்து தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும் யாம்ஆர் எமதுஆர் பாசம்.ஆர் என்ன மாயம் இவைபோகக் கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு போம்ஆறு அமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்அடிக்கே (3) அடியார் ஆனிர் எல்லிரும் அகல விடுமின் விளையாட்டை கடிசேர் அடியே வந்து அடைந்து கடைக்கொண்டு இருமின் திருக்குறிப்பைச் செடிசேர் உடலைச் செலநீக்கிச் சிவலோ கத்தே நமைவைப்பான் பொடிசேர் மேனிப் புயங்கன்தன் யூஆர் கழற்கே புகவிடுமே (4) விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவே காலம் இனிஇல்லை உடையான் அடிக்கீழ் பெரும்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப்படுமின் அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணிஆர் கதவு.அது அடையாமே புடைபட்டு உருகிப் போற்றுவோம் புயங்கன் ஆள்வான் புகழ்களையே (5) 796