பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தொன்பதாவது திருப்படை ஆட்சி சீவோபாதி யொழிதல் (சீவ உபாதி ஒழிதல்) (தில்லை) ஆசிரிய விருத்தம் கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்வில் என்வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடும் ஆறு மறந்திடும் ஆகாதே மால் அறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே பண்களி கூர்திரு பாடலொடு. ஆடல் பயின்றிடும் ஆகாதே பாண்டிநல் நாடுஉடை யான்படை ஆட்சிகள் பாடுதும் ஆகாதே விண்களி கூர்வது.ஒர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே 828 (i)