பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. திருவம்மானை கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியனை வெளிவந்த மால்அயனும் காண்பரிய வித்தகனைத் தெளிவந்த தேறலைச் சீர்ஆர் பெருந்துறையில் எளிவந்து இருந்துஇரங்கி எண்அரிய இன்அருளால் ஒளிவந்து என்உள்ளத்தின் உள்ளே ஒளிதிகழ அளிவந்த அந்தணனைப் பாடுதும்காண் அம்மானாய் (18) முன்னானை மூவர்க்கும் முற்றும்ஆய் முற்றுக்கும் பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின் மன்னானை வானவனை மாதுஇயலும் பாதியனைத் தென்ஆனைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை என்னானை என் அப்பன் என்பார்கட்கு இன்அமுதை அன்னானை அம்மானைப் பாடுதும்காண் அம்மானாய் (19) பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன் அடியார் குற்றங்கள் நீக்கிக் குணம்கொண்டு கோதாட்டிச் சுற்றியசுற்றத் தொடர்வு அறுப்பான் தொல்புகழே பற்றி இப்பாசத்தைப் பற்றுஅற நாம்பற்றுவான் பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும்காண் அம்மானாய் (20) 380