பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திருப்பொற் சுண்ணம் சுந்தர நீறு அணிந்தும் மெழுகித் தூ யபொன் சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பகம்நாட்டி எங்கும் எழில்சுடர் வைத்துக் கொடி எடுமின் அந்தரர் கோன் அயன்தன் பெருமான் ஆழியான் நாதன் நல்வேலன் தாதை எம்தரம் ஆள் உமையாள் கொழுநற்கு எய்ந்த பொற்சுண்ணம் இடித்தும் நாமே (3) காசு அணிமின்கள் உலக்கை எல்லாம் காம்பு அணிமின்கள் கறை உரலை நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தித் தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித் திரு ஏகம்பன் செம்பொன் கோயில்பாடிப் பாச வினையைப் பறித்து நின்று பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே (4) அறுகு எடுப்பார் அயனும் அரியும் அன்றி மற்று இந்திரனோடு அமரர் நறு முறு தேவர் கணங்கள் எல்லாம் நம்மில்பின்பு அல்லது எடுக்க ஒட்டோம் செறிவு உடை மும்மதில் எய்த வில்லி திரு ஏகம்பன் செம்பொன் கோயில்பாடி முறுவல் செவ் வாயினிர் முக்கண் அப்பற்கு ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே (5) 388