பக்கம்:திருவாசகம்-ஆங்கில மொழிபெயர்ப்பு-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திருக்கோத்தும்பி தினைத்தனை உள்ளது.ஒர் பூவினில்தேன் உண்ணாதே நினைத்தொறும் காண்தொறும் பேசும்தொறும் எப்போதும் அனைத்துஎலும்பு உள்நெக ஆனந்தத்தேன் சொரியும் குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ (3) கண்ணப்பன் ஒப்பதுஓர் அன்பு:இன்மை கண்டபின் என்அப்பன் என்ஒப்புஇல் என்னையும் ஆட்கொண்டருளி வண்ணப் பணித்து என்னை வா என்ற வான் கருணைச் சுண்ணப் பொன் நீற்றற்கேசென்று ஊதாய் கோத்தும்பி (4) அத்தேவர் தேவர் அவர் தேவர் என்று இங்ாவன் பொய்த்தேவு பேசிப் புலம்புகிற பூதலத்தே பத்து ஏதும் இல்லாது என் பற்று அற நான் பற்றி நின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்று ஊதாய் கோத்தும்பி (5) 4:04