பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


கலந்தாண்டுகொண்ட நீ, இன்று தளர்ந்து விழப்போகும் என்னைத் தாங்கிக்கொள்ள வேண்டும்’ என்கிறார்.

106.

கொள் ஏர் பிளவு அகலாத் தடம் கொங்கையர்
      கொவ்வைச் செவ்வாய்
விள்ளேன் எனினும் விடுதி கண்டாய்
      நின் விழுத் தொழும்பின்
உள்ளேன் புறம் அல்லேன் உத்தரகோச
       மங்கைக்கு அரசே
கள்ளேன் ஒழியவும் கண்டுகொண்டு
      ஆண்டது எக் காரணமே 2

கொள் ஏர் பிளவு அகலாத் தடங்கொங்கை-கொள்ளின் பிளவு அளவுகூட அகலாத கொங்கை. விள்ளேன்-விட்டு நீங்கேன். விழுத்தொழும்பு-பெருமைக்கு ஏதுவாகிய அடிமை. ஒழியவும்-பிரிந்திருக்கவும். விடுதி கண்டாய்-விட்டு விடாதே. கள்ளேன்-கள்ளத்தன்மை உடையவன்.

‘ஐயனே! மகளிர்பற்றிய நினைவு அகலாதவனாக இருந்தும் உன் அடியார் கூட்டத்தில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டேன். ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு புறத்தே உள்ளவன் என்று என்னைக் கூறக்கூடாது. எனவே, என்னை விட்டுவிடாதே’ என்றவாறு.

107.

கார் உறு கண்ணியர் ஐம் புலன்
    ஆற்றங்கரை மரமாய்
வேர் உறுவேனை விடுதி கண்டாய்
     விளங்கும் திருவா
ரூர் உறைவாய் மன்னும் உத்தரகோச
     மங்கைக்கு அரசே
வார் உறு பூண் முலையாள் பங்க
     என்னை வளர்ப்பவனே 3

காருறு கண்ணியர் - கரிய கண்ணினை உடையர்.