பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 11


வருத்தத்தை வெளியிடுகிறது. தாம் பெற்ற அனுபவம், அடியார் கூட்டத்தின் நடுவே, குருநாதரின் எதிரே இருந்த பொழுது கிடைத்ததாகும். இப்பொழுது அது போய் விட்டதென்றால், அடியார் கூட்டத்தோடு இல்லாமல் தாம் தனியே விடப்பட்டதால் அந்த அனுபவம் போய் விட்டதோ என்று கலங்குகிறார்.

தவம் செய்யவில்லை, மலரிட்டு வணங்கவில்லை எனினும் அந்த அனுபவம் கிடைத்தது. ஆனால், இப் பொழுது அது போய்விட்டது என்றால், இவை இரண்டையும் வாலாயமாகச் செய்யாததனாலோ என்ற ஐயம் மனத்திடை உறுத்துகின்றது.

10.

பரந்து பல் ஆய் மலர் இட்டு முட்டாது
அடியே இறைஞ்சி
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம்
என்னும் அன்பர் உள்ளம்
கரந்து நில்லாக் கள்வனே நின் தன்
வார் கழற்கு அன்பு எனக்கும்
நிரந்தரமாய் அருளாய் நின்னை
ஏத்த முழுவதுமே 6

பரந்து-எல்லாத்தலங்களிலும் சென்று. ஆய்மலர்-வண்டு, பூச்சி, புழுக்கடி, சிதைவு, முறிவு முதலியன இல்லாது ஆய்ந்த மலர். இரந்த எல்லாம்-குறையாக வேண்டிற்று எல்லாம். கரந்து-மறைந்து. நிரந்தரம்-எப்பொழுதும்.

இப்பாடல் செல்கின்ற முறையில், 'பரந்து, பல் ஆய் மலிரிட்டு, முட்டாது அடியே இறைஞ்சி இரந்து' என்றதால், சம்பிரதாய வழியில்நின்று பூசனை புரிகின்ற பலரும் ஒன்றை இரந்து நிற்கிறார்கள். அது என்ன வென்றால், 'எல்லாம் எமக்கே பெறலாம்' என்றதால் உலகத்திலுள்ள எல்லா நலங்களும், எல்லாச் சிறப்புகளும் எமக்கே அருள வேண்டும் எனக் கேட்பதாகும். இப்படி