பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



சென்று பற்றும் பொறியாகிய கண் சிறப்புடையதே ஆயினும், மூடியிருக்கும் கண் அதனை உடையவன் விரும்பினாலன்றித் திறந்துகொள்வதில்லை. ஆனால், நின்று பற்றும் பொறியாகிய செவி தன் பணியைப் புரிவதற்குக்கு அதனை உடையவன் ஆணை தேவையில்லை.

புறத்தே தோன்றும் ஒலி செவிப்பறையில் வந்து தாக்கும்போது, அச்செவியை உடையவன் அதனைத் தடுத்து நிறுத்த இயலாது. இந்த நுணுக்கத்தை அடிகளார் இங்குப் பேசுகிறார்.

‘கேட்டேயும்’ என்பதிலுள்ள உம்மை, நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்கள் பாட்டின் ஒலி உன் செவிப்பறை வழிப்புகுந்து உன்னை எழுப்பியிருக்க வேண்டுமே. அப்படியிருந்துமா எழவில்லை என்ற பொருளைத் தருகிறது. பார்த்தலுக்கும் கேட்டலுக்கும் உள்ள வேறுபாடு இது என்க.

இவ்வாறு பேசத் தொடங்கிய பெண்கள் உள்ளே உறங்குடவளின் செவிகள் பழுதடைந்துவிட்டனவோ என்று ஐயுற்று, 'வன்செவியோ நின்செவிதான்’ என்கின்றனர்.

நேற்றுவரை மெல்லிதாக இருந்து புறத்தே எழும் ஓசையை உன்னுள் வாங்கித்தந்த அதே செவிப்பறைகள் இன்று வன்செவியாக மாறிவிட்டதோ என்றும் பேசுகின்றனர்.

உறங்குபவளைப் பார்த்து 'வாள் தடங்கண் மாதே’ என்று விளிப்பது சற்று வியப்பைத் தருவதாகும். மூடிய கண்களை வாளுக்கு உவமையாகக் கூறுவதோ அல்லது ஒளி பொருந்தியது என்று கூறுவதோ பொருத்தமற்றதாகும். பலரும் இதனைக் கேலியாகக் கூறியது என்று பொருள் கூறியுள்ளனர். அவ்வாறு கொள்வது பொருத்தமாகத் தெரியவில்லை. அவளுடைய கண்ணுக்குள்ள இயல்பான