பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 195


இந்த இரண்டு சிறப்புக்களையும் நினைவூட்டுவதன் நோக்கம், அவள் கண்களைத் திறந்து வாள்போன்ற கூர்மையையும், ஒளி பொருந்திய தன்மையையும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தவே ஆகும்.

முதலடி ஆழ்ந்து சிந்திப்பதற்குரியதாகும். மணிவாசகப் பெருமான் மிக ஆழ்ந்த விஞ்ஞான அறிவும். வானியல் புலமையும் கொண்டவர் என்பதைத் திருஅண்டப் பகுதியில் விளக்கியுள்ளோம்.

உலகத்தைப் பொறுத்தமட்டில் அனைத்திற்கும் காரணமாக இருப்பவன் கதிரவனே ஆவான் என்பது இன்று பலரும் பேசும் விஞ்ஞானக் கருத்தாகும். ஆனால், இப்பிரபஞ்சத்தைப் பொறுத்தவரை இக்கதிரவன் உண்டாகாத காலமும் உண்டு; அதேபோல இவன் அழியப் போகும் காலமும் ஒன்று உண்டு. தன்னுடைய மாபெரும் ஒளியை இழந்து, ஒரு ஒளியிழந்த கோளாக, இக்கதிரவன் சுற்றப்போகும் காலமும் ஒன்றுண்டு. ஆக, இம்மாபெரும் கதிரவனுக்கும் ஒரு தோற்றமும் முடிவும் உண்டு என்பது இன்றைய நாள் வானியலாரும் கூறும் செய்தியாகும்.

பூமியிலிருக்கும் நமக்குக் கதிரவன் ஒளி மிகப் பெரியதாகவும் சிறப்புடையதாகவும் காணப்படுகிறதே தவிரப் பல கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் சென்றுவிட்டால் கதிரவன் ஒளி மழுங்கி விண்மீன் போலக் காட்சியளிப்பான் என்றும் வானியலார் கூறுகின்றனர். சுருங்கச் சொல்லுமிடத்து ஒளிப்பிழம்பு என்று நாம் சொல்லும் கதிரவனுக்குத் தோற்றம் உண்டு; முடிவும் உண்டு; தூரம் செல்லச்செல்ல ஒளியின் தீட்சண்யக் குறைவும் உண்டு என்பதை அறிகிறோம்.

பேரொளி வடிவான இறைவனுக்கு இக்குறைகள் எதுவும் இல்லை. இதனை வலியுறுத்தவே அடிகளார் ‘ஆதியும் அந்தமும் இல்லாச் சோதி' என்றும்