பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


‘பெருஞ்சோதி' என்றும் ‘அரும்பெரும் சோதி' என்றும் கூறுகின்றார்.

வேத கால நாகரிகத்தில் கதிரவனுடைய ஒளியைப் பெரிதாக மதித்து, கதிரவனையே முழுமுதல் பொருள் என்று கருதி வழிபட்டனர். பிற்காலத்தில் இக்கருத்து வலுவடைந்து அறுவகைச் சமயங்களுள் ஒன்றாகச் ‘செளரம்’ என்று பெயரில் சூரிய வழிபாடு தனியொரு சமயமாக இடம்பெற்றது.

அதனை அடுத்த காலத்தில் ஐம்பெரும் பூதங்களையும் சந்திரன், சூரியன், இயமானன் (ஆன்மா) ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து இவை அனைத்தும் இறை வடிவங்கள் என்ற கருத்தில் 'அட்ட மூர்த்தங்கள்' (எட்டு வடிவங்கள்) என்று பெயரிட்டனர்.

திருஞானசம்பந்தர், நாவரசர், சுந்தரர் ஆகிய மூவர் காலத்திலும் (ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை) இக்கருத்தே வலுப்பெற்றிருந்தது. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய அடிகளார். இந்த அட்டமூர்த்தக் கருத்தை அடியோடு மறுத்துவிடுகிறார்.

ஐம்பெரும் பூதங்களும் சூரிய சந்திரர்களும் அவற்றின் இயல்புகளும் இறைவனால் படைக்கப்பட்டனவே தவிர அவை அவனன்று என்ற கருத்தில்

. . . . . . நாடொறும்
அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு
மதியில் தண்மை வைத்தோன் திண்திறல்
தீயில் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானில் கலப்பு வைத்தோன் மேதகு
காலில் ஊக்கம் கண்டோன் நிழல்திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் என்றென்று