பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


புறத்தே நின்று இப்பேச்சைக் கேட்டவர்கள் அவள் மனம் வாடிவிட்டதைப் புரிந்துகொண்டு, அவள் மனம் தேறும்படியாக இதோ பேசுகின்றனர்: 'தோழி! நின் அன்புடைமை எத்தகையது என்பதை நாங்கள் எல்லோரும் நன்றாக அறிவோம். தூய்மையான சித்தமுடைய நீயும் நாங்களும் செய்யவேண்டியது ஒன்றுண்டு. சிவனைப் பாடுவதுதான் அச்செயலாகும். இது தவிர வேறெதுவும் தேவையில்லையாதலால் இத்துணையே வேண்டும்’ (அவனைப் பாடுதலாகிய தொழில்மட்டும் எமக்குப் போதுமானது) என்று கூறி முடிக்கலாயினர்.


158.

ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப் பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய் 4


நித்திலம் - முத்து. மருந்து - அமுதம். அவம் வீண்.

இப்பாடல் முன்னைய பாடல்களைப் போலவே புறத்தே நிற்பவர்களுக்கும், உள்ளே இருப்பவளுக்கும் இடையே நடைபெறும் உரையாடலாக அமைந்துள்ளது.

‘ஒள் நித்தில நகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?' என்பது எழுப்பவந்தவர்கள் கூற்றாகும். இதன் மறுதலையாக 'வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?’ என்று வினவுகிறாள். அவ்வினாவிற்கு விடை கூறத் தொடங்கிய புறத்தே நிற்கும் பெண்கள் சற்றுப் பொறு, வந்தவர்களை எண்ணி இத்தனை பேர் என்று விடை கூறுகின்றோம் என்ற கருத்தில் 'எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்' என்றனர். இச்சொற்களைக்