பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228 • திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


கூறினாராயிற்று. 'ஒரு தோழம்’ என்ற பாடமும் உண்டு. தோழம் என்ற சொல் மிகப் பெரிய பேரெண்ணை ஆதாவது 'எண்ணிலி’ என்பதைக் குறிப்பதாகும் இச் சொல். 'ஓத ஒரு தோழம்’ என்றதால் அவனைப் பற்றியும், அவன் பெருமைகளைப் பற்றியும் ஓதத் தொடங்கினால் எண்ணிலடங்காதவனாவான் என்ற பொருளைத் தந்து நிற்கும்.

நீராட வந்துநின்ற பெண்கள் கோயில் பிணாப் பிள்ளைகளைக் கண்டவுடன் தங்களையும் அவர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். காலை நேரத்தில் ஒன்றுகூடி இறைவன் புகழைப் பாடிக்கொண்டு நீராடுகின்ற இவர்கள் அப்பணி முடிந்து வீடு திரும்பியதும் தத்தம் பணிகளில் ஈடுபடுவர். இறைவனைப்பற்றிச் சிந்திக்கவோ அவன் இயல்புகளை ஆராயவோ அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. ஆனால், கன்னி மாடங்களில் தங்கி இறை பணியிலேயே நாள் முழுவதையும் செலவிடும் இப்பிணாப் பிள்ளைகள், அவனைப்பற்றிச் சிந்திக்க மிகுந்த வாய்ப்புடையவர்கள் ஆயிற்றே. எனவே, தங்கள் மனத்தில் தோன்றிய ஐயங்களை அவர்கள்பால் கேட்டுத் தெளியலாம் என்ற எண்ணத்தில் இதோ பேசுகின்றனர்.

'கோயில் பிணாப் பிள்ளைகாள்! ஏது அவன் ஊர்? ஏது அவன் பேர்? (அவனுக்கு) உற்றார் யார்? அயலார் யார்? அவனைப் பாடும் பரிசு எது?’ என்று தம் மனத்தில் இதுவரை முடங்கிக் கிடந்த ஐயங்களை வெளியிடுகின்றனர்.

அதிகம் பழக முடியாமல், ஆனால், நம்மால் பெரிதும் மதிக்கப்படுகின்ற ஒரு பெரியவரிடம் நெருங்கிப் பழகுகின்றவர்களைக் கண்டவுடன், அப்பெரியவரைப்பற்றி அறிந்து கொள்ள நாம் முயல்வது இயல்பன்றோ? இந்த இயல்பை