பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236 • திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


இப்பொழுது ஒரு புதிய காட்சியை நல்கத் தொடங்கிற்று. பல்லாண்டுகளாக அவ்வூரில் அக்குளம் இருக்கும் இடத்தில்தான் இருக்கிறது. தாமரைப் பூ கருங்குவளைப் பூ பறவைக் கூட்டங்கள், நீர்ப் பாம்புகள் என்பவை அக்குளத்தில் என்றுமே இருந்துவருகின்றன.

ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு குளத்தருகே வந்ததை 163ஆம் பாடல் முதல் பார்க்கிறோம். அந்த நிலையிற்கூட இந்தப் பழைய குளம் புதுக் காட்சியை அவர்களுக்கு நல்கியதாகத் தெரியவில்லை.

தாங்கள் வழியடியார்கள் என்ற நினைவு அவர்கள் மனத்திடைத் தோன்றலாயிற்று. பரம்பரையாகச் சில பண்புகள் தொடர்ந்து வருகின்றன என்பதும் இவற்றைத் தாங்கிநிற்கும் ஜீன்கள் ஒவ்வொருவர் உடம்பிலும் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உள்ளதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றிற்குரிய பண்புகள் மிகுந்து காணப்படும் என்பதும் விஞ்ஞானத்தால் கண்ட உண்மை. இதனை நம் முன்னோர் என்றோ அறிந்திருந்தனர். ஆதலால்தான், ‘பழ அடியார்' என்றும் 'வழி அடியோம்’ என்றும் பாடல்களில் அடிக்கடி பேசப்பெறுகிறது.

வழி அடியோம் என்ற நினைவு இப்பெண்களுக்கு வரும்வரை துளையமாடுகின்ற குளமாகவே அக்குளம் காட்சியளித்தது. இந்நினைவு வந்தவுடன் குளம், குளமாக மட்டும் காட்சி அளிக்கவில்லை. மாதொரு கூறனாகவும் காட்சியளிக்கத் தொடங்கிற்று.

ஒரே பொருள் மாறுபட்ட இரண்டு பொருள்களாகக் காட்சியளிப்பது உண்டா என்ற வினாத் தோன்றும். இவ்வினா நியாயமானதே. காண்பானுடைய மனபபக்குவத்திற்கு ஏற்பக் காணப்படுபொருள் காட்சியளிக்கும். இம்மகளிர், உலகியல் நிலையில் நின்றபொழுது வெறும் குளமாகவும், மலர்கள் குருகுகள் பாம்புகள் முதலியவை