பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளும்
கொள்கையால் மிகைபல செய்தேன்

(திருமுறை: 7-69-6)

குன்றே அனைய குற்றங்கள் குணமாம் என்றே நீ

கொண்டால்

என்தான் கெட்டது இரங்கிடாய் எண்தோள் முக்கண்

எம்மானே
(திருவாச: 498)

திருவாசகத்தில் உள்ள பாடல்களை ஆழ்ந்து கற்பவர்களுக்கு ஓர் அடிப்படையான ஐயம் மனத்தில் தோன்றினால், அது இயல்பே ஆகும். சிவபுராணத்திலேயே ‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்’ என்றும், அடுத்து வரும் பகுதிகளில், ‘என் உள் புகுந்து ஆண்டான்’ என்றும் ‘என்னை ஆண்டாய்க்கு என்றும், புகுந்து நின்றான்’ என்றும், பலபடியாகப் பாடிய அடிகளார், நீத்தல் விண்ணப்பம் முழுவதிலும் ‘என்னை கைவிட்டுவிடாதே’ என்று பாடுவது முன்னுக்குப் பின் முரணாக இருப்பதுபோல் தோன்றலாம்.

ஆழ்ந்து நோக்கினால், இந்தக் கூற்றுக்களில் முரண்பாடு ஏதும் இல்லை என்பது தெரியும். திருப்பெருந்துறை நிகழ்ச்சி முற்றாக இவரை இறையனுபவத்தில் மூழ்க வைத்தது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. அந்த அடிப்படையில்தான் இமைப் பொழுதும் போன்ற தொடர்கள் இடம்பெற்றன.

இந்த அனுபவத்திலேயே அடிகளார் இருந்திருப்பின், திருவாசகம் என்னும் மனித குலத்தை உய்விக்கும் பாடல்கள் தோன்றியிருக்க முடியாது. அந்த அனுபவத்திலேயே முழுவதுமாக இருந்திருப்பின் ‘சிரிப்பார், களிப்பார்' என்ற முறையில் அடிகளாரின் வாழ்க்கை கழிந்திருக்கும். மனித வாழ்க்கையில் அடையவேண்டிய மிகப் பெரிய ஒன்றைத் திருப்பெருந்துறையில் அவர்