பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 363


என்ற நினைவில் உள்ள இவர்கள், அவனிடம் உறவு கொள்ளவோ, தமக்குரியவனாக அவனைச் செய்து கொள்ளவோ முற்படுவதே இல்லை.

இதனெதிராக, மற்றொரு சாரார் ஓரளவு அறிவின் துணை கொண்டு அவனை அறிய முற்பட்டு அந்த ஆய்வின் முடிவில் தம் அறிவை, உதறித் தள்ளி விடுகின்றனர். இவர்கள், உள்ளத்தில் நிறையும் அன்பு காரணமாக அனைத்தையும் கடந்து நிற்கின்ற கடவுளைத் தமக்கு உறவுடைய பொருளாகக் கருதத் தொடங்கி விடுகின்றனர். இந்த உறவுமுறை முதிர்ந்தவுடன் இறைவனைத் தமக்குரியவனாகவே கருதத் தொடங்கி விடுகின்றனர். உறவின் அடிப்படையில் தோன்றிய இந்த உரிமை, முதிர்ச்சி அடைய அடைய அவனைத் தாயாக, தந்தையாக, குழந்தையாக, காவலனாக, நண்பனாக, எஜமானனாக, தமக்கே உள்ள உரிமைப் பொருளாக (காதலனாக இவர்கள் கருதத் தொடங்கிவிடுகின்றனர். இதனைப் பொதுவாக மேனாட்டாரும், சிறப்பாகக் கிறித்துவர்களில் ஒரு பகுதியினரும் தனி உரிமைக் கடவுட்கொளகை (Concept of Personalised God) என்று கூறுவர்.

தனி உரிமை உறவு முறை ஏற்பட்டதனால்தான் பின்வரும் பாடல்கள் இப்பெருமக்களிடம் தோன்றலாயின.

என்னை வருத்திலையேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே!

(திருமுறை: 4-105-2,3)

யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி

(திருமுறை: 7-51-10)

சங்கிலிக்கா என் கண் கொண்ட பண்ப

(திருமுறை: 7-69-3)