பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 41


வெள்ளம்-கங்கைநீர். வேட்ட-விரும்பிய. பள்ளந்தாழ் உறுபுனல்-பள்ளத்தைநோக்கி ஒடுகின்ற நீர். உள்ளந்தாள்- உள்ளங்கால்

இப்பாடலின் முன் இரண்டு அடிகள் அடிகளாரின் குறிக்கோளையும், பின் இரண்டு அடிகள் அவரது விருப்பத்தினையும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

முதலிரண்டு அடிகளில் கூறப்பெற்றுள்ளவர்களைப் பற்றிச் சிந்திப்பது நலம். எல்லையற்ற இறையனுபவத்தில் மூழ்கித் திளைத்து, ஊனும் உயிரும் உள்ளமும் உருகும் நிலையை அடிகளார் பெற்றாரேனும் அதன் அடிப்படை வேறுவகையானது. திருப்பெருந்துறையில் குருவைக் காண்கிறார்; அவரிடம் செல்கிறார்; வீழ்ந்து வணங்குகிறார்; திருவடி தீட்சை பெறுகிறார். அமுத தாரைகள் அவர் எற்புத் துளைதொறும் ஏற்றப்பெற்றன. உருகுவதோர் உள்ளங்கொண்டு உருச்செய்தாங்கெனப் புதியதோர் பிறவி எடுக்கின்றார். இத்தனை நிகழ்ச்சிகளுக்குப் பிறகுதான் இந்த நிலை அடிகளாருக்கே வருகின்றதே தவிர அதற்கு முன்னர் இந்நிலை அவருக்குக் கிட்டவில்லை.

‘வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே’ என்று கேட்ட அளவில் 'வேட்ட நெஞ்சோடு பள்ளந்தாழ் உறுபுனலில் தலைகீழாக' வீழும் இயல்பு அவருக்கு இதற்கு முன்னர் இல்லை. திருப்பெருந்துறைக்குப் பின்னரே அது நிகழ்ந்தது.

அப்படியானால் கேட்டவுடன் 'உருகும் அவர் நிற்க என்று பாடுவதன் நோக்கம் யாது? பொதுவாகவோ சிறப்பாகவோ 'அவர் நிற்க' என்ற சொற்கள் யாரையும் குறிப்பிடவில்லை.

அப்படியானால் இந்த இரண்டடிகள், அவருடைய குறிக்கோள் என்று கூறியமைக்குக் காரணம் என்ன என்று சிந்திப்பதில் தவறில்லை. கண்டு, சென்று, வணங்கி