பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 53


சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை
     துணை இலி பிண நெஞ்சே
தேடுகின்றிலை தெருவுதோறு அலறிலை
     செய்வது ஒன்று அறியேனே 31

பாதமலர்-பாதமாகிய மலர், பாதத்தில் மலரை என விரித்து, சூடுகின்றிலை சூட்டுகின்றதுமிலை என்பனவற்றோடு இயைத்துப் பொருள்காண்க.

திருப்பெருந்துறையில் திருவடி சூட்டப்பெற்றபொழுது அடிகளார் பேரானந்தத்தில் மூழ்கினார். செயலிழந்து சமாதி நிலையில் இருந்தார். பின்னர் அந்த அனுபவம் குறையக் குறைய அதனையே நினைந்து இறைப்பிரேமை கொண்டு ஆடுதல், பாடுதல், பதைத்தல் முதலிய செயல்களில் ஈடுபட்டார். அதன்பிறகு பல இடங்களிலும் அன்பர்கள் மலர் கொண்டு இறைவனை வழிபடுதலைக் கண்ட அடிகளார், திருக்கோயில் பணிகளில் தாம் ஈடுபடாமல் இருப்பதை நினைந்து வருந்தினார்.

ஆடுதல், பாடுதல் முதலிய செயல்கள் இறைப்பிரேமையில் அழுந்தி வெளிவரும்போது நடைபெற்ற செயல்கள் அல்லவா? இப்பொழுது அந்தப் பிரேமையும் குறைந்துவிட, ஆடுதல் முதலிய செயல்கள் நின்றுவிட்டன. அதாவது முன்னர் நிகழ்ந்த ஆடுதல், பாடுதல் என்பவை இவருடைய முயற்சியின்றித் தாமாக நிகழ்ந்தனவாம். எனவே, அந்தப் பிரேமை குறைந்தவுடன் அவையும் நின்றுவிட்டன.

இந்த நிலையை நினைந்து அடிகளார் வருந்துவதை இப்பாடல் விளக்குகின்றது.

‘உடையான் கழற்கு அன்பில்லை' அதனால் நீ கூத்து ஆடவில்லை. ஆடத்தான் இல்லை என்றாலும் பாடவாவது செய்திருக்கலாம். அதுவும் செய்யவில்லை. மெய், மொழி என்ற இரண்டினாலும் செய்யப்பெறுகின்ற கூத்து, பாடல் என்பவை செய்யப்பெறவில்லை என்றாலும் மனத்தில்