பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திருப்பொற்சுண்ணம் |ஆனந்த மனோலயம்) பொற்சுண்ணம் என்பது அழகிய வாசனைப் பொடி என்பதாகும். மிகப் பழங்காலத்திலேயே இத்தகைய கண்ணத்தைக் கிராமங்களில் வாழும் மக்கள் தாங்களே இடித்துத் தயாரித்துக்கொண்டனர் என்று அறியமுடிகிறது. இவ்வகைச் சுண்ணத்தை மகளிர் குளிப்பதற்குப் பயன் படுத்தியதோடு சாதாரண நிலையிலும் பூசிக்கொண்டனர் என்று நினைப்பதில் தவறில்லை. இச் சுண்ணம் பல்வேறு வகைப்பட்ட பொருள்களை ஒன்றுசேர்த்து இடிக்கப்படுவதாகும். வசதி குறைந்தவர், ஒன்று அல்லது இரண்டு வாசனைப் பொருட்களை மட்டும் இடித்துப் பயன்படுத்தினர். (மாதவி குளிப்பதற்குப் பயன்படுத்திய பொடி மிகப் பல வாசனைப் பொருள்கள் சேர்த்து இடிக்கப்பட்டதாகும் என்று சிலம்பு பேசுகிறது.) குணமாலை, சுரமஞ்சரி இருவரும் தத்தம் வாசனைப் பொடியே உயர்ந்தது என்றுகூறி மனம் மாறுபாடு கொள்ள, இவற்றுள் சிறந்தது எது என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பைச் சிவகநம்பியிடம் விட்டுவிட்டனர் என்பதைச் சீவக சிந்தாமணி பேசுகிறது. பல்வேறு வாசனைப் பொருள்கள் மிகுந்த அளவில் சேர்த்து இடிக்கப்படுதலின் ஒருவர்மட்டும் நின்று இடித்தல் சற்றுக் கடினமாகும். எனவே, இருவரோ அல்லது நால்வரோ எதிர் எதிராக நின்றுகொண்டு இடித்தனர் என்பதை அறிய முடிகிறது. உரலில் உள்ள சிறிய குழியில் ஓர் உலக்கைக்கு மேல் ஒரே நேரத்தில் உள்ளே செல்ல முடியாது. எனவே, இந்த நால்வரும் ஒரு தாள கதியை