பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 அடிப்படையாக கொண்டு ஒன்று, மூன்று, இரண்டு, நான்கு என்ற முறையில் மாறிமாறி இடித்தனர் என்பதைத் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் வள்ளைப்பாட்டு மூலம் அறிகிறோம். இந்தத் தாள கதிக்கு ஏற்ப உலக்கை விழவேண்டு மானால் அதற்கேற்ற இசையோடுகூடிய பாடல் ஒன்று வேண்டும். திருவாசகத்தில் வரும் திருப்பொற்சுண்ணம் இந்தத் தாள கதிக்கு ஏற்ப அமைக்கப்பெற்ற ஒசைநலம் கொண்ட இசைப் பாடல்களைக் கொண்டதாகும். பெரும்பாலும் எட்டுச் சீர்களைக் கொண்ட விருத்தப் பாடல் ஆயினும், சில பாடல்கள் ஆறு சீர், ஏழு சீருடன் அமைந்துவிட்டன. இந்த நுணுக்கம் அறியாத பிற்காலத்தார் சொற்களைப் பிய்த்து எட்டுச் சீர்ோ, ஏழு சீரோ எல்லா அடிகளிலும் வரும்படியாக எழுதிவிட்டனர். இசைப் பாவின் துணுக்கம் அறியாதார் செய்த பிழையாகும் இது. இப்பெருமக்கள் தேவாரத்திலும் தம் கைவரிசையைக் காட்டத் தவறவில்லை. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருவிராகம் என்ற பெயரில் வரும் முடுகு அமைந்த பாடல்கள் ஐந்து சீர்கள், நான்கு சீர்கள், என்ற முறையில் முதலடியும் அடுத்த அடியும் மாறுபட்டு வருதலைக் காணலாம். இப்பாடல்களுக்கு உயிர்நாடி இசை ஆதலால் பல இடங்களில் விருத்தப் {...fr இலக்கணம் மீறப்பட்டுள்ளது. அடிகளாரின் திருப்பொற்சுண்ணமும் இவ்வகையினதே ஆகும். திருவாசகத்தின் பிற பாடல்களில் காணப்பெறாத இசை அமைப்பு , திருப்பொற்சுண்ணத்தில்மட்டும் அமைந்திருத்தலைக் காணலாம்.