பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்கண்ணம் 3 கண் காம் இடிப்பதைக் கூறும் பழைய பாடல்கள் அகத்தினையின்பாற் பட்டு இயற்பட -: மொழிதல் (தலைவனைப் புகழ்ந்தும்) இயற்பழித்து மொழிதல் (தலைவனைப் பழித்தும்) என்ற முறையிலும் தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி துயரத்தை வெளிப்படுத்தும் முறையிலும் அமைந்துள்ளன. ஆனால், அடிகளாரின் திருப்பொற்சுண்ணம், எல்லா உயிர்கட்கும் தலைவனாகிய இறைவனின் புகழை, உரலின் எதிரெதிராக நிற்கும் பெண்கள் பாடிக்கொண்டே மாறி மாறி இடிக்கும் தாள கதியில் அமைந்துள்ளது. உள்ளன்போடு இறைவன் புகழைப் பாடுதலின், மனம் இறையன்பில் மூழ்கி யிருக்க, பாடலின் தாள கதிக்கு ஏற்ப உலக்கை பிடித்த கைகள் மட்டும் மாறி மாறி இடிக்கின்றதைக் காணலாம். இத் தொகுப்புக்கு 'ஆனந்த மனோலயம்' என்று முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர். இது எவ்வகையில் பொருத்தமாகிறது என்று தெரியவில்லை. ஆனந்தம் காரணமாக எழும் மன லயத்தில் கண்ணிர் அரும்பி வாய் குழறுமே தவிரத் தாள கதிக்கு ஏற்பப் பாடல் வெளிவராது. முன்னர்ப் பல இடங்களில் நாம் குறித்துள்ள இறைப் பிரேமைதான் (Divine Ecstacy) ஆனந்த மனோலயம் எனப்பெறும். இதனை விளக்கவந்த அடிகளார், சிரிப்பார் களிப்பார் தேனிப்பார்' (திருவாச. 386) என்ற பாடலில் ஆனந்த மனோலயம் உடையார் செயல்களை விரித்துக் கூறியுள்ளார். இந்நிலையில் உள்ளவர்கள் எந்த ஒரு செயலையும் தொடர்ந்து செய்யமுடியாது. தாள கதிக்கு ஏற்ப உலக்கையை இடித்தல் இயலாத காரியம். இதனால் இத்தலைப்பின் பொருத்தமின்மை அறியலாம். இதுபோன்ற தவறுகள் இடைக்காலத்தில் புகுந்துள்ளன என்பதற்கு மற்றோர் உதாரணத்தையும் காணலாம். சைவத்திலும் திருவாசகத்திலும் எல்லையற்ற ஈடுபாடு கொண்டு, அன்றாடம் திருவாசகப் பாராயணம் செய்யும்