பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 யாழ்ப்பாணம்வாழ் சைவப்பெருமக்கள் வீட்டிலும், தென்பாண்டிச் சைவர்கள் பலர் வீட்டிலும் இன்றும் ஒரு தவறு நிகழ்ந்துவருகிறது. மங்களகரமான பொற்சுண்ணம் இடிப்பதை என்ன காரணத்தினாலோ சாவு வீட்டில் செய்துவருகின்றனர். இது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. இறைவனுக்குப் பொற்சுண்ணம் இடித்தல் மனத்தில் ஆனந்தத்தை நிரப்புவதால் ஆனந்த மனோலயம் என்ற உள்தலைப்பு பொருத்தமானதேயாம்). 195. முத்து நல் தாமம் பூ மாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல் தீபம் வைம்மின் சத்தியும் சோமியும் பார்மகளும் நாமகளோடு பல்லாண்டு இசைமின் சித்தியும் கெளரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொள்மின் அத்தன் ஐயாறன் அம்மானைப் பாடி ஆடப் பொற்கண்ணம் இடித்தும் நாமே i தாமம்-மாலை. சோமி-திருமகள். சத்தி-ரெளத்திரி. சித்திகணபதியின் சத்தி. கெளரி-காளி. பார்ப்பதி-உமை. மகளிர் குளிப்பதற்குப் பயன்படுத்தும் வாசனைப் பொடி அன்றாடம் இடித்துப் பயன்படுத்தக் கூடியதன்று. நான்கு பெண்கள் கூடி உரலில் இட்ட பொருள்களை இடித்து, சலித்து தயாரிக்க வேண்டிய இப்பொடி இரண்டு அல்லது மூன்று மணிநேர வேலையாகும். எனவே, சில மாதங்களுக்கு வேண்டிய பொடியைத் தயாரிக்கத் தொடங் குமுன் அதை ஒரு விழாவாகக் கொண்டாடினர்போலும், அன்றியும் இங்குத் தயாரிக்கப்படும் பொடி இறைவனுடைய அபிடேகத்தில் பயன்படுத்தப்படும் பொடியாதலின் மக்களுக்குத் தயாரிப்பதுபோல் அல்லாமல் இறை பக்தியோடு அனைவரும் ஒன்றுகூடி இதனைச் செய்தனர்.