பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பொற்கண்ணம் 5 ஒரு நல்நிகழ்ச்சி நடைபெறவேண்டுமானால் வீட்டைத் துய்மை செய்து மாலைகள் தோரணங்கள் முதலியவை தொங்கவி ப்படுதலைக் கிராமங்களில் இன்றும் காணலாம். அந்த முறையில் இறைவனுக்குரிய பொற்சுண்ணத்தை இடிக்கத் தொடங்குமுன் நல்ல முத்துக்களால் ஆகிய மாலைகளை விடு முழுவதும் தொங்கவிடுங்கள்’ என்று பாடலைத் தொடங்குகின்றார். திருமணம் முதலிய நல்விழாக்கள் நடைபெறும் பொழுது நவதானியங்களை முளைக்கச்செய்து சிறு கிண்ணங்களில் நிரப்பிவைத்தல் இன்றும் நடைபெறுவதாகும். இதனை முளைப்பாரி என்பர். முளைப்பாரி கொண்ட சிறு கிண்ணங்கள் வட்டமாக வைக்கப்பெற்று, அதன் நடுவே பூரண கும்பம் வைக்கப் பெறும். இதனைச் சுற்றி அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பெறும். இதனையே அடிகளார் "முளைக்குடம் தூபம் நல் தீபம் வைம்மின்’ என்று பேசுகிறார். அடுத்து சக்தி, சோமி, பார்மகள், நாமகள் என்ற பெயர்களையுடைய பெண்களை அழைத்துப் பல்லாண்டு பாடும்படியாகப் பணிக்கின்றார். சித்தி, கெளரி, பார்வதி, கங்கை என்ற பெயருடைய பெண்கள் நால்வரும் கவரி வீசப் பணிக்கப்படுகின்றனர். இாண்டு கூட்டத்தாருக்கும் குறிப்பிட்ட பணி பகிர்ந்து அளிக்கப்பட்டபின் ஐயாறன் ஆகிய பெருமான் நீராடும் பொழுது பூசுவதற்குரிய சுண்ணத்தை இடிக்கத் தொடங்கலாம் என்கிறார் அடிகளார். சத்தி முதல் கங்கை வரை உள்ள எட்டுப் பெயர்களும் உலகிடை வாழும் சாதாரண மானிடப் பெண்களின் பெயர்கள் என்றே உரை காணப் பெற்றுள்ளது. காரணம், அபிடே கத்துக்கு இ.ரியவனாக இருப்பு வன் ஐயாறன் ஆவான் அவனுடைய அபிடேகத்திற்குத் தேவையான