பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திருவாசகம் - சில சிந்தனைகள் - 3 பொற்சுண்ணம் இடிக்கத் தொடங்கவேண்டும் என்றே பாடல் தொடங்குகிறது. ஐயாறனுக்குரிய சுண்ணத்தை இடிக்கும்பொழுது மேலே கூறிய எட்டு மகளிரும் அவ்வப்பெயருக்குரிய தெய்வ மகளிர் என்று கூறுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை. 196, பூ இயல் வார் சடை எம்பிராற்குப் பொன் திருச்சுண்ணம் இடிக்கவேண்டும் மாவின் வடு வகிர் அன்ன கண்ணிர் வம்மின்கள் வந்து உடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறம் நிலாமே குனிமின் தொழுமின் எம் கோன் எம் கூத்தன் தேவியும் தானும் வந்து, எம்மை ஆளச் செம் பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே 2 'மலர்கள் நிறைந்த சடையை உடைய இறைவனுக்கு அபிடேகப் பொருளாகிய பொற்சுண்ணத்தை இடிக்கத் தொடங்க வேண்டும். ஆதலால் பிளந்த மாவடுப் போன்ற கண்ணையுடைய பெண்களே! இல்லத்தின் வெளியே நிற்கும் அடியார்களைக் கூவி அழையுங்கள். அனைவரும் சேர்ந்து இறைவன் புகழைப் பாடுங்கள்; குனிந்து அவனைத் தொழுங்கள். - தில்லைக் கூத்தன் தன் தேவியோடு எம்மை ஆள இதோ வந்துவிட்டான்; உடனடியாகப் பொற்சுண்ணத்தை இடிக்கத் தொடங்குவோமாக என்கிறார். 197. சுந்தர நீறு அணிந்து, மெழுகி, தூய பொன் சிந்தி, நிதி பரப்பி இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும் எழில் சுடர் வைத்துக் கொடி எடுமின் அந்தரர் கோன் அயன் தன் பெருமான் ஆழியான் நாதன் நல் வேல்ன் தாதை